Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “நீங்க வெறும் அட்டகத்தி தான்”….. அசீமை செமயா கலாய்த்த விக்ரமன்….. அனல் பறக்கும் ப்ரோமோ….!!!!!

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 14 பேர் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டியது மிகவும் தவறு என்று அசீமிடம் கூறுகிறார்.

அதைக் கேட்ட அசீம் சிரித்துக் கொண்டே நீங்கள் பேசுவதை கேட்கும் போது ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்பது எனக்கே தெரிய வருகிறது என்று கூறுகிறார். உடனே விக்ரமன் நீங்கள் ஸ்ட்ராங்கான போட்டியாளரெல்லாம் கிடையாது. நீங்க ஒரு சாதாரண அட்டகத்தி என்று கூறுகிறார். இதனுடன் ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. மேலும் இந்த வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |