Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் மீண்டும் ‘நாடா காடா’ டாஸ்க்… ராஜ வம்சத்து உடையில் மாஸ் வசனம் பேசும் ஆரி… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ‘நாடா காடா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்ட டாஸ்க் லெட்டரில் ‘சொர்க்கபுரி ராஜ குடும்பமும் மாயாபுரி அரக்கர் குடும்பமும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள் . சிலையாக மாறும் நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நிஷா கூறுகிறார்.

ஒருபுறம் சிலையாக இருக்கும் கேபியை சிரிக்க வைக்க அரக்கர்கள் முயற்சி செய்கின்றனர். மற்றொருபுறம் ராஜ வம்சத்து உடையில் ‘பல சவால்களை சந்தித்து 100வது நாளை கடந்து விட்டேன் , இதெல்லாம் எனக்கு சாதாரணம்’ என மாஸ் வசனம் பேசுகிறார் ஆரி. இந்தப் புரோமோ பார்ப்பதற்கு சற்று சுவாரசியமாக இருந்தாலும் கொடுத்த டாஸ்கையே மீண்டும் கொடுக்க வேண்டுமா? புதிய டாஸ்க் இல்லையா? என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |