Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் இறுதிப்போட்டி… இந்த முறை பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார்?…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பணப்  பெட்டியுடன் வெளியேறப் போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . தற்போது இறுதிப் போட்டிக்கு 6 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களை உற்சாக படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர் . இந்த சீசனின் இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் இறுதியில் போட்டியாளர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலக வாய்ப்பு வழங்கப்படும் . கடந்த சீசனில் கவின் பிக் பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதுபோல் இந்த சீசனிலும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது . இதில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் கொடுத்த தொகையைஎடுத்துக் கொண்டு வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் உண்மையா? என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Categories

Tech |