பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வீட்டில் பொம்மை விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது இன்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி பொம்மைகள் இருக்கும் கூடாரத்தை மறித்து நிற்கிறார்.
திடீரென அங்கே வந்த அசீம், அவரை தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். அதனைத் தொடர்ந்து “எங்க கை வெச்சு தள்ளுனான் தெரியுமா!” என்று அழுகிறார் தனலட்சுமி. தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரமன் மகேஷ்வரியுடன் சண்டையிடுகிறார்.