மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதில் ‘அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. இதனால் நான் பரிசோதனை செய்ததில் எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் இந்த வாரம் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பிக்பாஸில் கமலுடன் சேர்ந்து பங்கேற்றுள்ளதால் அவர் தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.