Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS கமல்ஹாசன் இனி…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை தொடர்பாக வெளியான செய்தியில், கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பிலிருந்து நலமுடன் மீண்டு வந்துள்ளார். சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது. அந்த டெஸ்ட் ரிசல்ட் இந்த வாரம் வந்து விடும். மற்றபடி அவர் நலமுடன் இருக்கிறார் என்ற மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் இறுதியில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது போல புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அது அவர் சில மாதங்களுக்கு முன்பாக காலில் அறுவை சிகிச்சை செய்த பின்னர் வீடு திரும்பும் போது எடுத்த புகைப்படம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |