விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் ஆயிஷாவையே போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி டார்கெட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன்பு வெளியான புரோமோவில், சக போட்டியாளரான ஜனனி, “ஆயிஷாவிடம் எனக்கு சண்டை வருவதுபோல் உள்ளது. அவர் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது” என்று கூற மற்ற போட்டியாளர்களும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டதால் ஆயிஷா அனைவரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். நேற்று அசல் கோலாருடன் ஏற்பட்ட மோதலிலும் ஆயிஷா கண்ணீர்விட்டு அழுத வீடியோ வைரலானது.