விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை அதில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். பத்து பெண் போட்டியாளர்கள், ஒன்பது ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் உள்ளே சென்றுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த இரண்டாவது நாளே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் அசல் கோலாரை நடிகை ஆயிஷா வாடா, போடா எடம் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு அசல் கோலார், என்னை வாடா போடா என கூப்பிட வேண்டாம் என ஆயிஷாவின் முகத்திற்கு நேராக கூறியதால் ஆயிஷா தனியாக அமர்ந்து கண்ணீர் சிந்து ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு ஆயிஷா அருகே சென்று ஆசையும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Day02 #Promo03 #NowStreaming on #disneyplushotstar @ikamalhaasan #BiggBossTamil #KamalHassan pic.twitter.com/iLNxWXLFUX
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 11, 2022