விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியின மக்களுக்கும் ஏலியன்களுக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அசீம் டாஸ்க் புக்கில் உள்ளது எல்லாம் என்னால் ஃபாலோ பண்ண முடியாது எனக் கூறுகிறார். யார் சொல்வதையும் நான் கேட்க மாட்டேன் எனவும் கூறுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாவிட்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.