பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் இருந்த பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. ஆரி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் ரன்னராக வெற்றி பெற்றவர் பாலாஜி . இந்நிலையில் பிக்பாஸில் பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . அதன்படி தினசரி 10,000 என்ற வகையில் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த பாலாஜிக்கு 10.5 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ரேகாவிற்கு 14 லட்சம் கிடைத்துள்ளதாம். ஆனால் 105 நாட்கள் பங்கேற்ற பாலாஜிக்கு ரேகாவை விட குறைவான சம்பளம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது . இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.