Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்?… லிஸ்டில் இல்லாத புதிய‌ டுவிஸ்ட்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர். மேலும் கடந்த வாரம் விஜே தனலட்சுமி வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, நிவாஸினி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் இந்த மூவரின் ஒருவர் தான் இந்த வார வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ராபர்ட் மாஸ்டர் செய்து வரும் காதல் வேலைகளால் எரிச்சல் அடைந்த ரசிகர்கள் அவரை தான் வீட்டை விட்டு வெளியேற்றுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி, இந்த வாரம் நிவாஸினி தான் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார் என்று தெரிகிறது. இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |