விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இன்றுடன் இந்த நிகழ்ச்சி 44வது நாளை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் தனலட்சுமி நான் 40 நாட்கள் இருந்த வீட்டை வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் யாருக்கும் அது புரியவில்லை என்றார். மேலும், இனிமேல் நான் என் கேமை எப்படி விளையாடுறேன்னு மட்டும் பாரு என தனலட்சுமி ஆயிஷாவிடம் கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.