Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த சீசனுடன் BIGG BOSS நிகழ்ச்சிக்கு குட்பாய் சொல்வாரா கமல்?…. கிசுகிசுக்கும் தகவல்கள்…..!!!!

தமிழில் கடந்த 2017 ஆம் வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்நிகழ்ச்சியை பலரையும் பார்க்க வைத்தது. இதையடுத்து கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சென்ற 2 சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஞாயிறுக்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் நாகார்ஜுனா அடுத்த சீசனை தொகுத்து வழங்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஒரே மாதிரியாக நிகழ்ச்சி போய்க்கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியம் குறைந்து விட்டது என்பதையும் நாகார்ஜுனா உணர்ந்துள்ளாராம்.

ஆகவே அவர் இந்த சீசனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6வது சீசன் இன்னும் ஒரு மாதம் நடக்க இருக்கிறது. கமல்ஹாசன் எதை செய்தாலும் சிறப்புடன் செய்யவேண்டும் என்று நினைப்பவர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவர் சிறப்புடன்தான் நடத்தி வருகிறார்.

எனினும் ரேட்டிங் வராமல் போவதற்கு அவர் என்ன செய்ய இயலும் என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே பெரிய அளவில் ரேட்டிங் வராத ஒரு நிகழ்ச்சியை, என்னதான் பல கோடிகளில் சம்பளம் கொடுத்தாலும் கமல்ஹாசன் அதனை செய்வாரா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அடுத்த சீசனுக்கு கமல்ஹாசன் நிச்சயம் “bye bye “சொல்லிவிடுவார் என்று கிசுகிசுக்கின்றனர்..

Categories

Tech |