கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர்த்து வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவில்லை. இதனால் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை எலிமினேஷன் இருந்தது. முன்பே கமல்ஹாசன் அவர்கள் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த நிலையில், நேற்று நிகழ்ச்சியில் இருந்து ராம் வெளியேறியுள்ளார். இதில் ராம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூபாய். 15 முதல் ரூ.22 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.