Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS : பெண் போட்டியாளரிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்…. ரெட் கார்ட் கொடுங்க…. நெட்டிசன்கள் கோரிக்கை….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமி மீதுதான் கவனமாக உள்ளார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை நிருபராக மாறி பேட்டி எடுத்தார். அப்போது ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு ரச்சிதா எனக்கு ராபர்ட் மாஸ்டர் அண்ணன் என கூறினார்.

அண்ணனுக்கு முத்தம் கூட கொடுக்க மாட்டியா என ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் முத்தம் கேட்டார். அதற்கு ரச்சிதா முத்தம் எல்லாம் கொடுக்க மாட்டேன் கையெடுத்து கும்பிடுவேன் என்றார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் அப்ப காலில் விழு என கூறினார். ரச்சிதாவும் காலில் விழுந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டருக்கு ரெட் கார்ட் கொடுங்க ஆண்டவரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/whyrajawhy/status/1589973809905676289

Categories

Tech |