பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா . பின் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் சம்யுக்தா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சம்யுக்தாவுக்கு கிடைத்துள்ளது . இளம் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சம்யுக்தா நடிப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தின் கதாநாயகியான ஸ்ரீதிவ்யா பிசியோதெரபிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.