Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பினாலே… டைட்டில் வின்னர் கார்டுடன் வந்த கமல்… வெளியான கடைசி புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகவுள்ளது . ஆரி, பாலா ,ரியோ ,ரம்யா, சோம் ஆகிய ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவார். இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் இன்றைய எபிசோட்  மிக சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது மற்றும் இந்த  நிகழ்ச்சியின் கடைசி புரோமோ வெளியாகியுள்ளது . அதில் மக்கள் தீர்ப்பு என்ற பெட்டியிலிருந்து டைட்டில் வின்னர் கார்டை கையில் எடுக்கிறார் கமல் .  இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர் யார் ?என்பது தெரிந்துவிடும் .

Categories

Tech |