Categories
சினிமா

BIGGBOSS Tamil சீசன் 5 போட்டியாளர்கள்…. வெளியான புது லிஸ்ட் இதோ…..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகை கௌசல்யா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி மற்றும் நடிகை பிரியாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரியங்கா, மிலா, ஷாலு ஷம்மு, கண்மணி சேகர் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |