விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஷகிலாவின் மகள் மிளா, நமீதா மாரிமுத்து, மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, பிரியா ராமன், ஜி பி முத்து, VJ. பப்பு ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மிளா இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் தனிமைப்படுத்த பட்டிருப்பதை ரசிகர்களுக்கு அது அறிவித்தது.