விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து பிரபல தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பியூட்டி சலூன் நடத்திவரும் ரேணுகா இங்கிலாந்தை சேர்ந்தவர்.தற்போது சென்னையில் பியூட்டி சலூன் நடத்தி வரும் நிலையில் சமந்தா மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் ரெகுலர் கஸ்டமர்கள்.