இலங்கை நாட்டில் பிரபல மீடியாவில் பணிபுரிந்தவர் ஜனனி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6ல் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். எனினும் நிகழ்ச்சி செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய் விட்டது.
அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதம்தான். இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ஜனனி இடம்பெற்று இருந்தார். இதற்கிடையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளுடன் ஏடிகே தான் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் ஜனனி எலிமினேட் ஆகியுள்ளார். இதுவரையிலும் பிக்பாஸ் வீட்டிலிருந்த ஜனனி நாளொன்றுக்கு ரூபாய். 21 முதல் ரூ. 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு பங்கேற்றதாக கூறப்படுகிறது.