இளையதளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட அதே நாளில் பிகில் படத்தில் நடித்த சௌந்தரராஜன் குழுவினர் 1000 மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள்.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு நல்வழியில் கொண்டாடுவதற்காக மரக்கன்றை நட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய 3 பேருக்கும் மரக்கன்றுகளை நடும் படி சவால் விட்டிருந்தார். அதனை ஏற்கும் வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்திய அளவில் அந்த பதிவு பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. இதுதொடர்பாக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த சௌந்தர ராஜா மற்றும் அவரது குழுவினர் இணைந்து தளபதி விஜய் மரக்கன்று நட்ட அதே நாளில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர ராஜா பதிவிட்டுள்ளார்.