பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம் விஜயனுக்கு கேரளா காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.
முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்து ஆட்டத்திலும் ஓய்வுபெற்ற இவர் கேரளா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயன் பதிவிட்டுள்ளார்.