அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் திரைப்படத்தில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணிகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிகளையும் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்தப்பின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு தயாராகி வருவதாக தெரிவித்திருந்த படக்குழு ஒரு பாடலையும், பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதம் 24-ம் தேதி திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.