டெல்லியில் 20 மாத குழந்தை மூளைச்சாவு அடைந்ததால் அதன் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.
டெல்லியில் தனிஷ்தா என்ற 20 மாத குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதனை கண்ட பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். குழந்தை உயிர் பிழைக்காது என்ற நிலையில், அந்த மருத்துவமனையிலேயே சக குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக குழந்தையின் பெற்றோர் அறிந்தனர்.
அதனால் உடனே மருத்துவர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் உறுப்புகள் மூலம் மேலும் ஐந்து குழந்தைகள் உயிர் பிழைத்து உள்ளனர். இந்த சோக சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.