நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இறப்பு வீதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. இந்நிலையில் குஜராத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் 2,3 கொரோனா நோயாளிகளை ஒன்றாக படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.