Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: தடுப்பூசி போட வேண்டாம்… பரபரப்பு அறிவிப்பு… மக்கள் அதிர்ச்சி…!!!

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்ற பரபரப்பு அறிவிப்பை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வாமை, காய்ச்சல், ரத்தக் கசிவு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது என பாரத் பயோடெக் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |