தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தல் அல்லது சீல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது புகார் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.