Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் ஜனவரி 25 வரை, உடனே… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்ய ஜனவரி 25ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தொடர்ந்து கண்காணித்து இரண்டாவது முறை தடுப்பூசி போடப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |