தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்டு 31 வரை கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லவும் தடை. ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்களில் தரிசனத்திற்கு தடை. வேதாரண்யம் கள்ளிமேட்டில் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி. மேலும் கள்ளிமேடு பகுதியில் பத்திரகாளிஅம்மன் கோவிலும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.