Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: நாடு முழுவதும் அடுத்த பெரும் ஆபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் உட்பட 3 பாகங்கள் உருமாற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் தொற்று குறுகிய காலத்தில் பரவி, பலரை விரைவாக தாக்கக்கூடும். மரணத்தை அதிகரிக்கும். இதன் தாக்கம் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |