Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIGNEWS: புயல் எதிரொலி, உடனே செல்லுங்க – அரசு அவசர அறிவிப்பு ….!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல் காரணமாக அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூர், பொழிச்சலூர், ஆதனூர், கரசங்கால், வரதராஜபுரம்  திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமிற்கு உடனே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |