Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: மக்களுக்கு அடுத்த இடி….. பெரும் அதிர்ச்சி செய்தி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்த நிலையில், ராஜஸ்தான், ஒடிசா,மத்திய பிரதேச மாநிலத்தில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் கங்கா நகரில் ரூ.102.57, ஹனுமன்கரில் ரூ.101.49, ஒடிசாவின் மல்கங்கிரியில் ரூ.102.30 என பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை கடந்தே டீசல் விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாநிலங்களிலும் சதமடிக்கும் என தெரிகிறது.

 

 

Categories

Tech |