Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: மனதை உருக்கும் சம்பவம்… சொல்ல வார்த்தையே இல்லை…!!!

குஜராத் மாநிலத்தில் காதலர் தின பரிசாக தன் மனைவிக்கு கணவர் கிட்னியை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வினோத் மற்றும் ரீட்டாபென் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அதில் வினோத் மனைவி கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நோயால் தன் மனைவி அவதிப்படுவதை கண்ட வினோத் காதலர் தினம் மற்றும் திருமண நாள் பரிசாக உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு கிட்னியை பரிசாக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தன் மனைவிக்கு விலைமதிப்பில்லாத பரிசு ஒன்றை அவர் கொடுத்துள்ளார்.

Categories

Tech |