சத்திஷ்கரை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ராகேஷ் சிங் என்பவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை விடுவிக்கக் கோரி அவருடைய ஐந்து வயது மகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வீடியோவாக உள்ளது.
இதையடுத்து நக்சல்வாதிகள் அந்த வீரருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிஆர்பிஎஃப் வீரரின் ஐந்து வயது மகள் அழுதுகொண்டே “நக்சல் மாமா என்னுடைய தந்தையை விட்டு விடுங்கள் பிளீஸ்” என்று அழுது கொண்டே கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.