Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…. தொலைந்துபோன மனிதநேயம்…!!

நபர் ஒருவரை நடு ரோட்டில் கம்பியால் சரமாரியாக இருவர் தாக்கியுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும்  பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கம்பியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதில் என்னவென்றால் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மக்கள் அடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அந்த உயிரை காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தகைய காட்சியை பார்க்கும் போது நம் நாட்டில் மனித நேயம் தொலைந்து விட்டதா? என்று தோன்றுகிறது.

Categories

Tech |