மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விக்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2017 சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர்களின் படங்களை பயன்படுத்த உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.