பீகாரில் பரவிய மூளை காய்ச்சலால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் ஜனவரி மாதம் முதல் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகின்றது. குழந்தைகளிடையே பரவி வரும் இந்த நோயின் தாக்கம் இந்த கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது.இந்த நோயின் காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 11 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் இதன் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் தொடர்ந்து ஆங்கரித்துக்கொண்டே இருந்தது.சில நாட்களுக்கு முன்பு இந்த நோய்யால் 41 குழந்தைகள் உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நோயின் தாக்கம் பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இருந்தது. மேலும் இது குறித்து அந்த பகுதியில் நடத்திய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையில் 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் , கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருப்பதாக தெரியவந்தது.