காயமடைந்த தந்தையை டெல்லியில் இருந்து 1200 கி.மீ தொலைவில் உள்ள சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்த சிறுமிக்கு இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெல்லி குர்கானில் சைக்கிள் ரிக்ஸா ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர் மோகன் பஸ்வான். விபத்தில் காயமடைந்த அவரை பார்க்க பீகாரில் இருந்து மகள் ஜோதிகுமாரி மார்ச் மாதம் டெல்லி வந்திருந்தார். மார்ச் 25ம் தேதி திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வருமானம் இன்றி இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் காயமடைந்த தந்தையை பிகருக்கு அழைத்து செல்ல முடிவு செய்த ஜோதிகுமாரி சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கி 1200கி.மீ பயணத்தை தொடங்கினார்.
டெல்லியில் புறப்பட்டு பல மாநிலங்கள் வழியே 10 நாட்கள் பயணம் செய்து பிஹார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான தர்பங்காவை சிறுமி ஜோதிகுமாரி சென்றடைந்தார். சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த செய்தியை கண்டு உணர்ச்சிவசப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ஜோதிகுமாரியின் செயல் சகிப்புத்தன்மையின் சாதனை என்று பாராட்டியுள்ளார். ஜோதிகுமாரிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரை சைக்கிள் பயிற்சிக்கு இந்தியா சைக்கிள் பெடரேஷன் அழைத்துள்ளது.