பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் திரு தேஜஸ்விஆதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு நிதிஷ்குமார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு லாலு பிரசாத்யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் சந்திக்கிறது. இந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகன் திரு தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 29 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.