Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்!”.. கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சி அழுத மனைவி!”.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள்.!!

பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அங்கிருக்கும் பணியாளர்கள் மிக மோசமாக நடந்துள்ளனர். இதனால் தன் கணவருக்கு உரிய சிகிச்சை அளியுங்கள் என்று ருச்சி செஞ்சு அழுதுள்ளார்.

அதனை பொருட்படுத்தாத பணியாளர்கள் ஈவு இரக்கமில்லாமல் மிகவும் கேவலமாக நடந்திருக்கின்றனர். இந்நிலையில் ரவுஷன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். என் கணவர் கொரோனாவால் சாகவில்லை. மருத்துவமனையின் மோசமான நடவடிக்கையால் தான் உயிரிழந்தார் என்று பத்திரிகையாளர்களிடம் ருச்சி கூறி அழுதுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவமனை பணியாளர் ஜோதிகுமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ருச்சி கூறியுள்ளதாவது, என்னிடம் மோசமாக நடந்தவர்கள் மீது காவல்துறையினரிடம் எப்ஐஆர் பதிவு செய்யப் போகிறேன். காவல்துறையின் உயர் அதிகாரிகள் அந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |