பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி. குழாய் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
பீகார் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஹெல்தியா துர்காபூரில் எல்.பி.ஜி. ஆலை மற்றும் பாங்ககாவில் உள்ள எல்.பி.ஜி. பாட்டிலிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பிரதமர் திரு மோடி நாட்டிற்காக இன்று அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் கலந்து கொள்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி இத்தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 131 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் இந்த தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களை கையாள முடியும்.