Categories
தேசிய செய்திகள்

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்…!!

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பீகாரின் சசாரம் பகுதிகளில் உள்ள பயாநோ மைதானத்தில் பிரச்சாரம்  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி மற்றும்  முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பீகார் சமீபத்தில் தனது 2 மகன்களையும் இழந்தது என்றார்.

ராம்விலாஸ் பஸ்வான் தமது இறுதி மூச்சு வரை தன்னுடன் இருந்தவர்  என்றும் அவரது தமது முழு வாழ்க்கையும் ஏழை மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்தார் என்றும் புகழாரம் சூட்டினார். இதேபோல் பாபு ரகுவேம் பிரசாந்த் சிங்கை பீகார் இழந்துள்ளது என்பதையும் என்று பிரதமர் அவர்களும் ஏழைகளின் நலனுக்காக மட்டுமே பணியாற்றி வந்தார். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என்று பேசினார்.

பீகார் மகன்கள் கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் உயிர்களை இழந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் பாரதமாதா தலைநிமிர்ந்து நிற்கிறார். அதோடு புல்வாமா தாக்குதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர் என்றார். அவர்களது காலடியில் தலை வைத்து நான் மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்  என்றார்.

Categories

Tech |