பீகார் மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் கொல்கத்தா இடையே இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பீகார் மாநிலம் சுலாயட் சிகோ இடையில் வந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அந்த வழியே செல்லக்கூடிய மற்ற ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.