பரபரப்பான அரசியல் சூழ்நிலைதான் தற்போது நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. மறுபுறம் தேஜஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஜ்ய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர், துணை முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான் தற்பொழுது நிதிஷ்குமார் மாநில ஆளுநர் சௌஹானிடம் நேரம் கோரி இருப்பதாக தகவல்கள் என்பது வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அவர் விலக கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், எம்எல்ஏக்கள் கூட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டும்.
அது தொடர்பாகத்தான் ஆளுநரிடம் நிதீஷ்குமார் சந்தித்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்காலம் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி நிதீஷ்குமாருக்கு நிபந்தனையை ஆதரவு வழங்க இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஆர் ஜே டி நிதீஷ்குமாருக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தற்போது அந்த ஆட்சி மாற்றம் என்பது பீகார் மாநிலத்தில் நிலவக்கூடும்.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சியிடம் 19 எம் எல் ஏக்கள் மட்டும்தான் இருக்கிறது. தனி பெரும் கட்சியாக இருக்கக்கூடிய 79 எம்எல்ஏக்களை கொண்ட ஆர் ஜே டி நிதீஷ்குமாருக்கு ஆதரவளித்தால் மட்டுமே பீகார் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் என்பது நிகழும். இதற்கிடையே ஆளுநர் சந்திப்பில், அரசியல் சூழலை குறித்தும், தற்போதைய ஆட்சி குறித்தும் நிதீஷ்குமார் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.