பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில்,
அதனை உறுதி செய்யும் தகவலாக மேலும் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக, பீகார் மாநில ஆளுநர் பாகு சௌஹானிடம் ஜேடி(யு) சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது மாலை 4மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றார் பீகார் முதல்வர். இதில் அமைச்சரவையை கலைப்பார் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கடிதத்தை கொடுத்து புதிய கூட்டணி அரசை அமைக்க உரிமை கோருவார் என தெரிகின்றது.