Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ! அவர இன்னும் காணலையே… வழியிலேயே வந்த வினை… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த பள்ளியில் அர்ச்சுனன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ராயக்கோட்டையில் இருந்து பூ ஏற்றி வந்த லாரி ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அர்ச்சுனனின் மனைவி நந்தினி புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |