கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக ராமர் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டு உள்ளார்.
அப்போது அவர் குருவிகுளம் தனியார் தொழிற்பயிற்சி மையம் அருகில் உள்ள வளைவில் திரும்ப முயற்சிக்கும்போது, இவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விட்டது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குருவிகுளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.