மோட்டார் சைக்கிளின் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முளை வாயல் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் மீஞ்சூர்-நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலரித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்