Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் பராமரிப்பில் இருந்த வாலிபர்… வீட்டுக்கு வரும் போது நடந்த சோகம்… நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் சென்னையிலிருந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு இனாம்சமயபுரத்திற்கு அப்துல் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து  கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த அப்துல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் விரைந்து வந்து அப்துல் அஸ்லாமின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் லாரி டிரைவரான செல்வராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |